Saturday, 9 May 2020

Kundalini yoga- மனிதன் தன் வாழ்நாளில் ஒருபோதும் விந்தணுக்களை வெளியேற்றாமலே வாழ்ந்து வந்தால் அவர் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் எந்த மாதிரியான விளைவுகளை சந்திப்பார்?




விந்து சக்தி என்பது ஒரு ஆண்மகனின் வாழ்க்கையில் , உடலில் ஜீவகாந்தம் தடைபெறாமல் இருப்பதற்காக இறைவனால் வழங்கப்பட்ட அருட்கொடை.
விந்து எந்த அளவிற்கு சேமிக்கப்படுகிறதோ , அந்த அளவில் உடலில் உள்ள ஜீவகாந்தப் பெருக்கம் ஏற்பட்டு நம் உடல் சீராக இயங்குவதற்கான சிற்றறைகள் ( cells) பலம் பெறும்.
எல்லா செல்களும் பலம் பெற்று , மேலும் விந்து சக்தி சேமிப்பில் இருந்தால், ஏதோ ஒரு வகையில் தன்னாலே வெளியேறி விடும்.தூக்கத்திலும் வெளியேறலாம். அல்லது அதை முறையாக வெளியேற்றி விடலாம். **விந்துக்களை அடக்கி வைத்திருந்தால், உடல் இயக்கத்திற்கு தேவையான விந்து சக்தி போக எஞ்சியவை கழிவாக வெளியேறிவிடும் என்பதால், விந்து வெளியேறாமல் வாழ்ந்துவருவது என்ற பேச்சுக்கே இடமில்லை.** ஆனால், அதில் ஒரு வரைமுறை தேவை.*விந்து விட்டவன் நொந்து கெடுவான்* என்ற நிலைக்கும் போய்விடக்கூடாது.
அந்த அதிகப்படியான விந்து சக்தியை வெளியேற்றாமல் பாதுகாக்கும் முறை சித்தர்களுக்கும், யோகிகளுக்கும், ரிஷிகளுக்கும் உரியது.
அவர்கள் தங்கள் யோகநிலையால், விந்து சக்தியை சுழுமுனை நாடி வழியாக மேலே எழுப்பி , தலை உச்சியாகிய துரியத்தில் நிலை நிறுத்தி , அதன் பயனாக அஷ்டமாசித்திகள் பெற்று பல பிரபஞ்ச இரகசியங்களை அறிந்து இந்த சமூகத்திற்கு வழங்கியுள்ளார்கள் என்பது தெளிவு.
முயற்சி எடுத்தால், நம்மைப் போன்ற சாதாரண குடும்பவாசிகளும் கூட யோகம் , தியானம் செய்யலாம். முறையாக ஒரு குருவிடம் கற்று தியானம் செய்துவந்தால், குறைந்தது நம் உடல் நிலையையும், மனநிலையையும் நல்லபடியாக பேணிவரலாம். சில இரகசியங்களையும் உணரலாம். நல்ல எண்ணங்கள் பலிதமாவதையும் உணரலாம்.
விந்தை வெளியேற்றக்கூடாது என்ற நிலை இருந்தால், கண்டிப்பாக குண்டலினி யோகம் செய்துவருவது நல்லது.
நலமே விளைக. நன்றி

No comments:

Post a Comment